திருமண வாழ்த்து

நமது தளத்தின் நண்பர்கள் அழகிரிசாமி மற்றும்
கலை அவர்களை வாழ்த்தும் திருமண வாழ்த்து.

விதியின் பதிவிது புதிய உறவும்
பதிவின் வரவிது தம்பதி மரபும்
பதியின் இணையும் சதியின் துணையும்
மதியின் வளர்வும் நிறைந்தும்தாம்
மாண்புற வாழ்கவே!

மென்மையும் திண்மையும் இணைந்தும்
உண்மையும் நன்மையும் பிணைந்தும்.
ஒண்மையும் தண்மையும் துணையென
பெண்மையும் ஆண்மையும் அணைந்தும்
வளமுற வாழ்கவே!

பயனுறு செல்வம் பதினாறும் பெற்றும்
இயனுறு நலமும் இனிதே உற்றும்
நயனுறு நன்னூல் மங்களம் ஏற்றும்
வியனுற வாழ்வே வாழ்ந்தே போற்றும்
இல்லறம் வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (20-Nov-13, 11:18 pm)
பார்வை : 258

மேலே