இரவு வணக்கம்

இரவு வணக்கம் சொல்லி
போகின்ற மேகம் ...

என் நிழலை கொஞ்சம் தள்ளி
சிரிக்கின்ற வானம் ...

மழலை பூக்கள் எல்லாம்
மின்னுகின்றன ஏனோ ...

என் பாதையில் கண் விழிக்க
நிலவும் வந்தது ஏனோ ...

இரவு வணக்கம் சொல்லி
போகின்ற மேகம்.



தென்றல் காற்று இங்கே
நடந்து வரும் போதும் ...

வண்டு ஊறும் பாடல்
கேட்டு நடந்து செல்லும் ...

என் காதில் கொஞ்சம் கத்தி
கொத்துகின்ற மரக்கொத்தி...

வெட்டி விட்ட கிளையில்
ஊஞ்சல் கட்டி கொண்டு ஆடும்...

இரவு வணக்கம் சொல்லி
போகின்ற மேகம்



சருகு இழைகள் கூட
பாம்பு சாரையாக ஓடும் ...

அருகம்புல் அங்கும்
பாதையாக தோன்றும் ...

மோதுகின்ற கிளைகள்
மெட்டுதானே கொடுக்கும் ...

சிரிக்கின்ற வானம்
கைதட்டி கேட்டும் ...

இரவு வணக்கம் சொல்லி
போகின்ற மேகம்

எழுதியவர் : காந்தி. (21-Nov-13, 4:01 pm)
Tanglish : iravu vaNakkam
பார்வை : 617

மேலே