சதுரங்கம்-16
ராகவன் அந்த குற்றவாளியை பற்றி சொல்லி கொண்டிருந்த சமயம்,,,,,,,
விஜயின் செல் போன் சிணுங்கியது,,,
"ஹலோ சார் நான் சரவணன் பேசுறேன் சார்,,, அந்த இராமலிங்கம் செத்துட்டான் சார் நீங்க உடனே ஸ்பாட்-க்கு வாங்க சார்"- என்றார் சரவணன்
சரவணனிடம் பேசி முடித்த அடுத்த அரை மணி நேரத்தில் , இராமலிங்கம் வீட்டில் இருந்தார்கள் விஜய், ராகவன், விஜயின் மேலதிகாரி மூவரும்,,,,,
கையில் இரத்த காயத்தோடு உஷா, சோபாவில் அமர்ந்திருந்தாள்,,,
அவளை தாண்டி விஜய் அந்த அறைக்குள் சென்றார் அங்கே இரத்தவெள்ளத்தில் ஒரு பெரிய திமிங்கலம் போல படுத்திருந்தான் இராமலிங்கம்
அங்கே வழக்கமான போலீஸ் நடவடிக்கைகள் எல்லாம் சரவணன் பார்த்துக் கொண்டிருந்தார்
உஷா கையில் கட்டு போடப்பட்டு கொண்டிருந்தது
"என்ன ஆச்சு சரவணன் "- கேட்டார் விஜய்
"சார் நம்ம திட்ட படி உஷா இராமலிங்கத்த பாத்து உதவி கேக்குற மாதிரி அவன் வீடுக்குள போய் அவன்கிட்ட தனக்காக ஒரு கொலை செய்யணும்னு கேட்கணும் அவன் இவங்களுக்கு உதவ வந்தா அத வச்சி அவன மடக்கனும் இல்ல அவன் இவங்கள தாக்கவோ இல்ல வெளிய அனுப்பவோ முயற்சி செய்வான் அப்போ உஷாக்கிட கொடுக்கப்பட்டுருக்க மைக் மூலமா நான் தெரிஞ்சிகிட்டு போய் அவன அரஸ்ட் பண்ணனும் இதான் பிளான்
ஆனா அவன் எப்டியோ உஷாக்கிட இருக்குற மைக்-கை கண்டுபிடிச்சிட்டான்
உஷா அந்த ரூம் உள்ள enter ஆனா வரைக்கு வேல செஞ்ச மைக் திடீர்னு ஆப் ஆயிடுச்சு,, அது மட்டும் இல்ல துப்பாக்கி வெடிக்கிற சத்தமும் கேட்டுச்சு உள்ள வந்து பாத்தா உஷா இரத்த காயத்தோட இருக்காங்க
அது மட்டும் இல்ல அந்த ஆள் அவமானம் தாங்க முடியாம தற்கொல பண்ணிகிட்டான் சார்"- என்று சொன்னார் சரவணன்
விஜய் நேரே உஷாவிடம் வந்தார்,,, அதற்குள் அந்த இடத்தை பத்திரிகைகாரர்கள் சூழ்ந்து கொண்டார்ர்கள் சரவணன் அவர்களுக்கு பதிலளித்து கொண்டிருந்தார்
இதையெல்லாம் அமைதியாக பார்த்து கொண்டிருந்தார் ராகவனும் விஜயின் மேலதிகாரியும்,
"உஷா அந்த ரூம் உள்ள என்ன நடந்தது"
"சார் நான் நீங்க சொன்ன மாதிரி உதவி கேட்க அவர் வீட்டுக்கு போனேன்,, ஆனா வேலைக்காரன் அய்யா வீட்டுல இல்ல நீ இந்த ரூம்ல இருன்னு சொன்னா நானும் நம்பி போனேன்
ஆனா அங்க இராமலிங்கம் இருந்தாரு அது மட்டும் இல்ல நான் போலீஸ் அனுப்பிய ஆளுன்னு அவருக்கு தெரிஞ்சிடுச்சு
என்கிட்டே இருக்குற மைக்-க்க எடுத்து ஒடச்சிடாரு அப்பறம் என்னையும் சுட்டாரு நான் நகந்ததால தோட்டா என் கையில பட்டுடுச்சு
போலீஸ் வர சத்தம் கேட்டதும் அவர அவரே சுட்டுகிட்டரு,,,,,,,,,, என் வாழ்க்கைல முதல் தடவையா ஒரு தற்கொலைய நேர்ல பார்த்துருக்கேன் சார் "- என்று சொல்லி அழதால் உஷா
"ஓகே காம்டோவ்ன்,,,,"- என்று பதிலளித்தார் விஜய்,,,,,,,,
பத்திரக்கைக்காரகள் இப்போது விஜயை சூழ்ந்துக் கொண்டார்கள்
"சார் இவர் தான் நீங்க தேடிய குற்றவாளியா, இவருக்கும் மும்பைல நடந்த குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இருக்கா???" - என்று கேள்விகள் கேட்டனர்
"ஆமா, ஆனா இவருக்கும் மேல ஒரு பெரிய குற்றவாளி இருக்கான் அவனையும் நாங்க கைது பண்ணனும்"- என்றார் விஜய்
"எப்போ கைது பண்ணுவீங்க சார்"- என்றார் ஒரு பத்திரிகை நிருபர்
"இப்போதே"- என்று தன கைத்துப்பாக்கியை உஷாவின் நெற்றியை நோக்கி குறி வைத்தார் விஜய்
(விளையாடுவோம்,,,,,,,,,,,,,,,)