முதன் முதலாய்

நான்
முதன் முதலாய்
மலைத்து பார்த்த ஓவியம்
உன் முகம்..!!!

நான்
சலனம் அடைந்த தென்றல்
உன் புன்னகை..!!!

நான்
எளிதாய் படித்த பாடம்
உன் மௌனம்..!!!

நான்
மெய் மறந்து கேட்ட இசை
உன் குரலோசை..!!!

நான்
இனிமையாய் ரசித்த கவிதை
உன் மனம்...!!!

நான்
முதன் முதலாய் உணர்கிறேன்
நான் பிறந்ததின் அர்த்தம்
உனக்காகவே என்று..!!!

எழுதியவர் : முருகேஸ்வரி (22-Nov-13, 4:56 pm)
Tanglish : muthan mudhalaai
பார்வை : 221

சிறந்த கவிதைகள்

மேலே