அட்சதை

உன்னிடம் பேசக்கூடாது
என்று சபதம் செய்து ,
மானங்கெட்ட தனமாய்,
"உன்னை ரொம்ப பிடிக்கும் ,
என்கிட்டே பேசு .."
என்று அழுது உன்னிடம்
பேசிவிடும் ,
ஒவ்வொரு சண்டைப் பொழுதுகளிலும் ,
எத்தனை தடவை
"இந்த காதலுக்கு கண் மட்டுமில்ல
சூடு , சொரணை எதுவுமே இல்லை "
என்று என் மீதே உமிழ்ந்து கொண்டாலும் ,
தான் இருப்பதை நிரூபித்து
வெற்றி கண்ட மகிழ்ச்சியில்
அத்தனையையும் அட்சதைகளாய்
ஏற்றுக்கொண்டு
சிரித்துக் கொள்கிறது
இந்த காதல் !

எழுதியவர் : வெற்றிமகள் (22-Nov-13, 4:49 pm)
Tanglish : atchathai
பார்வை : 104

மேலே