அதிசயமில்லை மன்னவனே
உயிரோடு இருந்தபோது
உணர்வுகளின் மீதும்
உடலின் மீதும்
கட்டி எழுப்பி நிறுவியதை
மறந்து மறைத்து விட்டதால்தான்
செத்த உடலின் மேல்
எழுப்பப்பட்ட தாஜ்மகால் அதிசயமென
சொல்லிப் போகின்றாய்
இன்னமும் தொடர்கின்றன
ஒவ்வொரு பெண்ணின்
உயிர்ப்புள்ள உடலின் மீதும்
கட்டி விட முயலுகின்ற
காணமுடியாது
உணரமுடிந்த
தாஜ்மகால்கள்
இடிக்கத் துவங்குகின்றேன்
நீ
என் மேல் கட்டத் துவங்கும்
தாஜ்மகாலின்
ஒவ்வொரு செங்கல்லையும்
என் வெப்ப சுவாசக் காற்றை
தாண்டிப் போகவைத்து.