பிச்சை புகினும் கற்கை நன்றே

பிச்சை எடுப்பினும் நன்றாய் படித்துவிடில்
வையம் உணகுக் கீழ் -----------------------------(1)
திருவோடு ஏந்திடினும் கற்க அதற்கே
கருவில் சுமந்தால்உன் தாய்--------------------(2)
விதைத்திடு மனதில் படித்திடும் எண்ணத்தை
கையேந்தி நின்றபின் னும்--------------------(3)
காசு உலகில் வேண்டிய தில்லை
மாசிலா கல்விதே வை_______________(4)
பேனா பிடிக்கும் கைஇங்கு ஏன்
வீணாய் எடுக்குதுபிச் சை_______________(5)
தமிழுடன்
விவேக்பாரதி