கடைசி நாளொன்றில்

இடமொன்றில் ஊன்றிவிட்டு வரும்
விதையைப்போல்

விட்டுவிட முடியவில்லை
மனம் மறக்க விரும்பும்
நினைவுகளை

பழகிய வீடென்றாலும்
நினைவு தடுமாறும்
நாளொன்றில்
தலை தட்டிவிடும்
வாசற்படியைப்போல்
உட்கார வைத்துவிடுகிறது
அனுபவக் கசப்பு

ரத்த நாளங்களாய்
உள்ளிறங்கிக்
கடைசி நாளொன்றில்
திருடிக் கொள்கிறது
புன்னகையை

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (24-Nov-13, 10:10 am)
பார்வை : 94

மேலே