மகனுக்கோர் செய்தி
பத்து மாசம் பரிதவிச்சு
பாசத்தோட பெத்த மகன்
பாரமாக எனை நெனைச்சு
போட்டுபுட்டான் வீதில
கண்ணு ரெண்டும் பொங்குமுனு
காரன்கூட சேர்க்கலையே
சளி புடிச்சி போகுமுன்னு
சாரலிலே போகலையே
காத்து கருப்பு அன்டுமுனு
தனிச்சி நானும் இருக்கலையே
பேச்சு மூச்சு நிக்கும் படி
பேசிபுட்டன் பாவிபுள்ள
கள்ளிப்பால் கொடுத்திருந்தா
காணாமலே போயிருப்ப
நெல்லுமணி போட்டு இருந்தா
நெலதோட சேர்ந்திருப்ப
கருவினிலே அழிச்சி இருந்தா
கண்ணீரா வழிஞ்சிருப்ப
முலைப்பால் தந்ததுக்கா
விசிபுட்ட மூலைஇல
பெத்தவள தள்ளிபுட்டு
கொண்டவள சேர்த்துகிட்ட
உன் மகனும் பிச்க்கிட்டா
அவ அவருவா என் துணைக்கு !!!!!!!!!!