காக்கும் தெய்வம்
இந்த பூமி தான்
மழைக்கு ஏங்குகிறது
எதற்காக இந்த சாமி
மழையை தாங்குகிறது ?
காற்றுக்கும் மழைக்கும் ஏன்
பனித்துளிகளுக்கம் கூட
அஞ்சி ஓடி அடைக்கலம் தேடி
பயம் கொண்டவள் !
அதே காற்றையும் மழையையும்
இன்று தாங்கி தடுக்கிறாள்
அன்னை என்று
அவதாரம் எடுத்தவள் !