திருமண வாழ்த்து
அன்பை பகிர்ந்து
ஆசையே சுருக்கி
இல்லத்தில் இன்பதை பெருக்கி
ஈகையே உனதாக்கி
உறவினரை அணைத்து
ஊக்கத்தை உயர்த்தி
எறும்பாய் உழைத்து
ஏணிப்படி ஏற (வாழ்கையில் உயர )
ஐயமுற வாழ
ஒற்றுமையே நிலைநிறுத்தி
ஓம் என்கிற ஓங்காரத்தை மனதிலிருத்தி
ஆயுள் காலமெல்லாம்
இதே நெருக்கம்,
அன்பு, உறவு,
மகிழ்ச்சி நீடித்து
உங்கள் வாழ்வில்
இத்திருமணம்
ஒற்றை வேரில்
உறவை வளர்த்து
பூவாய் பூத்து
அன்பாய் காய்த்து
மகிழ்ச்சியாய் கனிந்து
எழில்மிகும் சோலையாய்
வாழ வாழ்த்துகின்றோம்...!!