என்னை பிடிக்க வேண்டும்
என்ன என்ன பிடிக்குமென்று
என்னவளை கேட்திருந்தேன்
ஏதேதோ பட்டியலிட்டாள்
தலையில் துவங்கியவள்
பாதத்தில் முடிக்க
அணிவகுத்தன
அவளுக்கு பிடித்த அணிகள்
இவ்வளவு தானாயென
வினவுமுன்னே
விளைந்திட்டாள்
வீதியில் கிடைக்கும் குச்சிஐஸ்
இரவில் வரும் குல்ப்ஹி
அடிவாங்கினாலும்
பரித்துகொள்ள துடிக்கும்
தம்பியின் தலையணை !
வீட்டை பெருக்கும் போது,
பொறுப்பேயில்லையென
திட்டும் அம்மா !
அங்கங்கே கிடக்கும் துணிகளை கண்டு
கோபம் கொள்ளும் அப்பா !
இப்படி ஏதேதோ
சொல்லிக்கொண்டிருந்தவள்
ஒரு நிமிடம்
மௌனம் கொண்டு
இவையனைத்தும்
பிடிக்குமெனக்கு
உன்னை பார்க்கும் முன்னர்
ஏதோ ! விழியில் துளிநீர்
என்னை பிடிக்குமென்ற
அவள் சொல் கேட்க
ஆசைப்பட்ட இதயமும் !
என்னுள் பிறந்த கேள்வியும் !
அவள் சொல்லில்
சொர்க்கமடைந்தது
உறவில் கலவாத உயிர்
உணர்வால் கலந்தது
அவள் வாய்மொழியில் !

