துரை விஜயகுமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : துரை விஜயகுமார் |
இடம் | : செந்தலை,தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 28-Jun-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 392 |
புள்ளி | : 307 |
நான் கட்டுமான பொறியாளர்
சிறகுகளை விரித்து
பறக்க துடிக்கும் போது
தாய்மையின்
தியாகம் தெரிவதில்லை
கூட்டிலிருக்கும்
குஞ்சுகளுக்கு !
சிறகு விரித்து
சிகரம் தொட பறந்து
உணவிற்காக திருக்கையில்
உணரப்படுகிறது
தாயின் உன்னதம் !
வளர்த்து விட்டோமென்று
மறந்து விட்டோம்
வளர்த்து விட்டோரை !
ஆயுளை அடகு வைத்து
சுமந்தவள்
சுமையாகிறாள்
சுகத்தின் பிடியில்
பிள்ளைகள் !
ஈன்றோரை
இல்லதோராய்
இல்லத்தில்
சேர்க்கிறோம்
அனாதயாக !
அன்னையை
அனாதையாக்காமல்
ஆயுள் தந்தவளை
அவள் ஆயுள்ளவரை
நேசிப்போம் !
உருகுலைந்தாலும்
சுமையானாலும் ,
சுமக்கும் வரை
சுகம்தானே
கருவறையில்
கரு !
அன்னிய மோகத்தில்
பறந்து சிறைபடாமல்
பிறந்த மண்ணிலே
சுவாசிப்போம் !
தாயும்,தாய்மொழியும்,
எந்தன் மடியில் தவழும்
இரட்டை குழந்தைகள் !
கவிதையெழுத ஆசையுண்டு
தாய்மொழியில் கிறுக்குகின்றேன்
குற்றம் களைய நெற்றிக்கண் வேண்டா...
என்றென்றும்
உங்கள் தோழன்
விஜயகுமார் .துரை
காய்ந்து விழுந்த
இலையின்
நரம்புகளை கொண்டு
கூடு காட்டுகின்றது
பறவைகள்
அதே மரக்கிளையில்
கரத்தை தழுவிக்கொண்ட
அவள் காதல்
கைக்கடிகாரம்
எதிர்காற்றில் துப்பிய
எச்சில்
சந்தேகம்
நீ முகம் கழுவிய தண்ணீர் பாய்ந்த தோட்டத்து செடிகளில் பூத்துக்குலுங்குகின்றன அழகு
என் தேசத்தின்
தாகத்தை தீர்க்க தேவை
விவசாயி உயிர் !
அவன்
இறைவனை
விமர்சித்தானென்று
அவனை
ஈன்றவளை
விமர்ப்பதே
என் தேசத்தின்
நாகரீகம் !
வருத்தமோ !
மன்னிப்போ !
தவறு
இழைத்தவனின்
மனதிலிருந்து
வர வேண்டுமே
தவிர
உதைப்பேனென்றால்
வந்துவிடுமா ??
உருளும்
உலகில்
நீயும் நிற்பாய்
இந்த கூண்டில்
அன்று
உனக்கு
துணையாய்
நீ உதிர்த்த
வார்த்தை விதைகள்
முளைத்து
நிற்காது !
நம்பிக்கையை
கொன்றானென்று
நாகரீகத்தை
கொல்லாதே !
இது
தமிழன் தேசம்
மின்மினியின் ஒளியைப் போல்
பலரின் திறமைகள்
வெளிச்சத்தில் தெரிவதில்லை !
மூக்குக்கண்ணாடியை,
காட்டிக் கொடுக்கிறது,
முகக்கண்ணாடி,
சில தேடல்களில் ....
வள்ளுவனே !
எங்கோ
ஓர்
ஒற்றுமையுண்டு
தலைப்பிற்கும்
உனக்கும் .
ஓர் அடியில்
அளந்தவனே
வியந்தான் !
நீ ஈரடியில்
அளக்கையில்
உலகை !
அறிவுடைமை
விதைத்தவனே
அறிவாயா ?
வளர்ந்து நிற்கிறாய்
குமரிச் சங்கமத்தில்
வானுயரமாய் !
கோவில் கட்ட
நினைப்போரின்
அறியாமையாய் !
தாய்ப்பாலுக்கு
ஏங்கும்
கூட்டத்திற்கு
தமிழ்ப்பால்
ஊட்டியவனே !
‘அறத்துப்பாலில்’
மனசாட்சி
மரியாதை,
நன்னடத்தையை ,
விதைத்தவனே !
மரத்துத் திரிகிறான்
மனிதம் மரிக்கத்
துணிகின்றான்
ஆசையால் !
‘பொருட்பாலில்’
அரசியல்,
அமைச்சியல்மை,
அங்கவியல்,
ஒழிபியல்,
உரைத்தவனே !
உன்னை
புகைப்படமாக்