சச்சி ன் சச்சி ன்

சச்சி ...ன் சச்சி ..ன்...
இந்த வார்த்தைகளைக்
கேட்க்கும் எவருக்குமே
சிலிர்க்கும் போது....
அதற்கு சொந்தக்காரன்
உனக்கு இந்த இசைப்
பிடித்துப் போனதில்
புதுமை ஒன்றும் இல்லை !

நீ சொல்ல நினைத்த
அனைவருக்கும் நன்றி
சொல்லி விட்டாய் !
உன்னிடம் நன்றி
சொல்ல விரும்பும்
கிரிக்கெட் காதலர்களின்
பட்டியல் முடிவதில்லை !

16 வயதில் விளையாட
வந்தாய் என்றாய் !
வருடங்கள் உருண்டோடலாம் ,
ஆனால் உனக்கோ
என்றும் 16!

உன் மட்டை இனி
சுழலாது என
மண்டை குழம்பும் ரசிகர்கள்
ஏராளம் !

சச்சின் ஒரு சகாப்தம்
என்றால் ,
அது முடிந்துவிடும் ,
நீ ஒரு அகராதி என்றால்,
உன் பக்கங்கள் முடிந்துவிடும் ,

நீ ஒரு நல்ல மனிதன் !
ஒரு நல்ல மகன் !
ஒரு நல்ல விளையாட்டு வீரன்!
ஒரு நல்ல துணைவன் !
ஒரு நல்ல தந்தை !
சுருக்கமாய் சொன்னால் ,
நீ ஒரு சச்சின் ,
உனக்கு நீ மட்டுமே நிகர் !....
கிரிக்கெட் ஒரு அடி பின் தள்ளப்பட்டுள்ளது
மறுக்க முடியாத உண்மை!

நீ விளையாட வில்லை
என்றாலும் ,
உனக்காக எழுப்பப்பட்ட
கரவொலிகள் என்றும்
நீ விளையாடிய
அரங்கத்தில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும்....

எழுதியவர் : வெற்றிமகள் (26-Nov-13, 1:45 am)
Tanglish : sachchi n sachchi n
பார்வை : 156

மேலே