அதுவரையில் காத்திருப்பேன்

ஆண் வாசம் வெறுத்திருந்த என்மனதில்
உன்சுவாசம் எப்படியோ புகுத்திட்டாய்
எனை அன்பால் வென்றெடுத்தாய்
நீ மட்டும் எனக்கிந்த வரம்
தர மறுத்திருந்தால்
உனக்கு ஓர் மாற்றாக
நான் யாரைச் சேர்ந்திருப்பேன்..
உன் கனவில் நான் மூழ்கும்
காலமென்னை அழைப்பதினால்
கவிதையும் வார்த்தையும்
இடையூறு செய்யவேண்டாம்.
இடைவெளியே இல்லாத நெருக்கத்தில்
நாமிணைந்து சேரும் நாள் பார்த்திருப்பேன் அதுவரையில் காத்திருப்பேன்..

எழுதியவர் : வத்சலா சிவலிங்கம் .. (26-Nov-13, 1:56 am)
பார்வை : 190

மேலே