நாம்

சுதந்திர காற்றில்
பறக்கும் பறவைகள்
பணத்தால் பிடுங்கப்படுகிறது
சிறகு

ஜனநாயக ஆற்றில்
நீந்தும் மீன்கள்
இலவச தூண்டிகளில்
வாய்

அரசியல் மந்தையில்
வளர்க்கப்படும் ஆடுகள்
தேர்தல்களில் பலியிடப்படுகிறது
தலை

எங்கே நமக்கு
மனித உணர்ச்சி ?
எங்கே நமக்கு
ஆறாம் அறிவு ?

அதோ
அங்கே.......
டாஸ்மாக் கடை
போதையில்.....!
இதோ
இங்கே.........
பிச்சைக்காரனின்
இலவச திருவோட்டில்.....!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (26-Nov-13, 2:01 am)
Tanglish : naam
பார்வை : 363

மேலே