நான் கற்று கொண்டது

கண்ணாடி பார்த்து நடிக்க கற்றுக்கொண்டேன்

கண் ஜாடையில் கண்ணீரை மறைக்க
சிரிக்க கற்று கொண்டேன்

உண்மையை மறைக்க
பொய்மையை பேச கற்று கொண்டேன்

காதலை மறைக்க
நட்பிடம் பழக கற்று கொண்டேன்

நினைவுகளை அழிக்க
கனவுகளை வளர்க்க கற்று கொண்டேன்

கற்றது பள்ளியறையில் இல்லை
வாழ்க்கை என்னும் கடலோரம் தான் ...

எழுதியவர் : gandhi (26-Nov-13, 11:22 am)
Tanglish : naan katru kondathu
பார்வை : 170

மேலே