இப்படியும் நடக்குமா

கண்ணீர் கன்னங்களின் உருண்டோட, இருட்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் லாவண்யா

இரவு வானில் பௌர்ணமியும், அள்ளி சிதறிய வைரங்கள் போல நட்சத்திரங்களும் கண்சிமிட்டி அவளை அழைத்தது

ஆனால் அவள் மனமோ அதையெல்லாம் சுகிக்கும் நிலையில் இல்லை

"நாளை பொழுது விடிந்தால்,,,,,,,,,,,,,,,,,"- நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு

கடிகாரத்தை பார்த்தாள்,,,,,,,, சரியாக மணி 12,,,,,,,என்றது

இன்னும் 9 மணி நேரம் தான் அதன் பின்,,,,,,,,,

"ஐயோ அதைப் பற்றி நினைக்காமலாவது இரேன்"- மனதை அதட்டினாள்

ஆனாலும் அவள் மனம் அதையே சுற்றி சுற்றி வந்தது

திரும்பவும் மணி பார்த்தாள்,,, மணி 3 என்றது


"ஐயோ இது என்ன கொடுமை மூணு மணி நேரம் போய்டுச்சே,,,,,,,,, நேரம் ஏன் இவ்ளோ வேகமா போகுது"- கண்ணீரோடு தனக்கு தானே கேட்டு கொண்டாள்


எப்படி தூங்கினாள்,,,,, எப்படி தூங்கினாலோ

சூரியன் இரவின் இருள் ஆடையை கிழத்தெறிய,,,, பொன்னிற ஆடையை போர்த்திக் கொண்டது வானம்

லாவண்யா அலங்கரிக்கப்பட்டாள்,,,,,,,,,, தலையில் பூ சூடி,,,, புத்தாடை அணிவித்து,,,,,,, வாசனை தூள்களெல்லாம்(பவர்),,,,,,,,,,

பார்ப்பவர் கண்ணில் தேவதையாய் தெரிந்தாள்,,,

தன அறையில் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்

அப்போது அங்கு ஒரு ஆண் வந்தார்,,,,,,,,,,,,





"என்ன லாவண்யா குட்டி schoolkku டைம் ஆச்சு டா,,,,,,,,,,, இன்னைக்கு தானே உனக்கு 1st டே அழக்கூடாது டா,,,,,,,, டாடி ஈவ்னிங் வந்து உன்ன ஸ்கூல் லேந்து வீட்டுக்கு கூட்டிடுவரும்போது ஐஸ் கிரீம்,,,,,,,,, சாக்லேட் எல்லாம் வங்கி தரேன்,,,,,,,, ஓகே டா"- என்றார் மனோகர்


"நிஜமா,,,???"

"நிஜமா "

"ப்ரமிசா???"

"ப்ராமிஸா"

தன பிஞ்சு கால்களில் தோலால் செய்யப்பட்ட பாதணிகளை அணிந்து மெல்ல அடி எடுத்து வைத்தாள்,,,,,,,,,,,, 4 வயதான லாவண்யா

எழுதியவர் : நிலா மகள் (26-Nov-13, 11:28 am)
பார்வை : 236

மேலே