காதல்

காதல் கனிந்து வரக் காத்திருந்தான்
காலமெல்லாம், காலம்
நழுவுவதைக் கண்டுகொள்ளாக்
காளையொருவன்

காலம் கடந்தபின் கண்திறக்க
கண்முன் கிடந்த காலிப்புட்டிகள்
நடுவில்
கண்டுகொண்டான் ஒர்முகத்தை

நிலவில்லா இரவில்
உலா வர அவள் முகம்
முழுமதி வானில் முப்பது நாளும்
கண்டேனெனக் கவிதை புனைந்தான்
இன்புணர்வின் காதல்
என்றும் அழிவதில்லை என்றே
காரணம் .. காதலித்தவள்
முகம் கண்டுகொண்டதுமே

எழுதியவர் : (26-Nov-13, 1:50 pm)
Tanglish : kaadhal
பார்வை : 90

மேலே