உழவன் நான்

அக்கம் பக்கம் பார்க்கவில்லை ...
அழகை நான் ரசித்ததில்லை ...

ஆச்சரியங்கள் நிறைந்த உலகில் ..
அறுவடை செய்துவந்தேன் பகலில் ....

பட்டாடை உடுத்தியதில்லை ...
தலைநிமிர்ந்து யார் முன்னும் நடந்ததில்லை ...

வருடம் முழவதும் வேலை செய்தேன் ...
வருடத்தில் சில நாள் அறுவடை செய்தேன் ...

வசந்த காலம் ஒன்றை கண்டதில்லை ...
வருடம் முழவதும் வேலை செய்தலும் வயிற்றிற்கு உணவு போதவில்லை ...

வறுமை நிலை வந்தாலும் முடியவில்லை ....
என் வயல் முழவதும் தண்ணீர் பற்றவில்லை ....

மழை வரும் நாள் எது என்று கனவுகளோடு ..
தரையில் படுந்திருந்தேன் கனவுகளின் எண்ணங்களோடு ...

கடவுள் போல் வந்தது கார் மேகம் கருணை காட்ட ..
என் கற்பனை உலகத்தை நிஜமாக மாற்ற ...

மரத்தை பிடுங்கி ஏறிவதுபோல் காற்று வீச ..
மயங்கிய நிலையில் நான் மெல்ல கண் உறக்கம் சாய ...

காலையில் என் கற்பனைகளோடு கண்ணை திறக்க
கண் விழித்து பார்த்தேன் நிஜத்தை மெல்ல...

நல்ல மழை என் மனதை குளிர செய்த மழை ..
நல்ல வேளை என் குடிசையை மட்டும் அடித்து செல்லவில்லை ...

ஊரெங்கும் மழை வெள்ளம் ....
உட்க்கார்ந்தேன் என் கன்னத்தில் கையை வைத்த வண்ணம் ....

உழவன் நான் ..........

எழுதியவர் : சாமுவேல் (27-Nov-13, 6:49 pm)
Tanglish : uzhavan naan
பார்வை : 199

மேலே