வாழ்க்கைப்பயணம்
சிந்தனை நெறி தொட்டு,
உணர்வு உறவாட ... - ஒரு பயணம் !
அன்பு பொழிந்து பெற்று,
மகிழ்ச்சி செழிய ... - ஒரு பயணம் !
நாடகம் இயற்றி நடித்து,
பொழுது கழிய ... - ஒரு பயணம் !
வெற்றி வென்று தோல்வி படிந்து
காலங்கள் நடத்தும் ... - ஒரு பயணம் !
இந்த வாழ்க்கைப்பயணம்
அன்புடன் ஏற்று...மனமுடன் இயற்றி
நம்பிக்கை உடன் ஓட - இறைவனின் ஆசி.