இறுதி தேர்வு sem exam

எத்தனைமுறை எழுதிருந்தாலும்
தேர்வு அட்டவனை அறிவித்ததும்
தொற்றி கொள்ளும் பயம்.

இன்று படிக்கலாம் நாளை படிக்கலாம்
என எதுவும் படிக்காமலே நகரும்
படிப்பிற்காக விடும் விடுமுறை நாட்கள்.

புத்தகத்தின் திறந்திராத பல பக்கக்களை
புரட்டி புரட்டி எதை படிப்பது
எதை விடுவது என குழம்பி தவிக்கும்
தேர்வுக்கு முந்தைய நாளின் காலைப்பொழுது.

சமாளித்து படித்து கொண்டு இருக்கையில்
திசை திருப்பும் பக்கத்துக்கு வீட்டின் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஓசை.

அத்தனையும் மீறி படித்து முடிக்க
போகும் வேளையில் அன்று மட்டும்
அதிவிரைவில் கண்ணைகட்டும் தூக்கம்.

பிறந்தநாளுக்கு கூட கோவிலுக்கு செல்லாதிருக்கையில்,வராது வேண்டி
வந்து விட்ட தேர்வு நாளில்,இறைவனின் துணை வேண்டி கோவிலில் நிற்கும் காலை வேளை.

படித்து விட்டாயா இந்த கேள்வி கண்டிப்பாக
வரும், என படிக்காத கேள்வி காட்டி பதட்டத்தை
ஆரம்பித்து வைக்கும் தோழியை பயத்தோடும் பார்க்கும் தேர்வுக்கு சில மணிநேரம் முன்.

அவசரச்சிகிச்சை பிரிவில் இருக்கும் நெருங்கிய
உறவினரை பார்க்கப்போகும் பதைப்பதைபோடு
உள்ளே நுழையும் தேர்வு அறை.

இருக்கிற எல்லா தெய்வத்தையும்
வேண்டிக்கொண்டு பவ்வியமாய்
வாங்கும் வினாதாள்

எல்லாம் தெரிந்த கேள்விகளாகவே
இருக்க வேண்டிய தெய்வமெல்லாம்
கைக்கொடுத்த மிகிழ்ச்சியோடு
விடை எழுதும் தேர்வு நேரம்.

ஏதோ காவிரி பிரச்சனையை திர்த்து
வைத்துவிட்டதோரணையோடு, கம்பீரமாய்
விட்டு வெளியேறும் தேர்வு அறை.

சந்தோசமாய் நண்பர்களின்
உரையாடலுக்கு பின், மீண்டும் தொடரும்
அடுத்த தேர்வுக்கான ஆயத்தம்.

எழுதியவர் : bhuvanamutukrishnan (28-Nov-13, 12:20 pm)
பார்வை : 1061

மேலே