உண்மைகள் மறைக்கப்படும் நாளைகளுக்கான அவர்களுக்கு ,,,

ஒப்பீட்டு வாழ்க்கை
முரண்பாட்டுச் சிக்கலுக்கான
விடைகள் தேடுகின்ற
பயணங்கள்
கோட்பாடுகளுக்குள் அடங்கப்படாத
வாழ்வியல்
ஆசைகள் இழுத்துச்செல்லும் சூழ்நிலைகள்
இன்னும் பல
நடுத்தர வர்க்கத்தின் நாட்களின் நகர்வுகள்
யாசகம் செய்யவோ ஆடம்பரமாக வாழவோ விட்டுகொடுக்காத
எட்டிப்பிடிக்காத பொருளாதாரம்
இருட்டிலே ஆரம்பித்து இருட்டிலே
இருப்பிடம் சேரும் உழைப்பு
சுகமாகத்தான் இருக்கிறேன்னு சொல்லி சந்தோஷம்
கேட்டே பழகிப்போல பொழுதுகள்
எல்லாம் தெரிந்த உழைப்பாளிகள் நாளுக்கொரு வேலை
என்ன செய்ய ?
உப்பு மேனிகள்
ஓய்வெடுக்கும் ஈச்சமரத்து ஈர்க்கு நிழல்
வெயில் புகுந்த கணுக்களில்
வியர்வை வழிகிறது
தொப்பாய் நனைந்த ஆடையில்
உப்புத் துகள்கள் ,,,,
ஊருக்கு சொல்லாத சோகம் ,,,
இன்னும் ரெண்டு நாளில்
சம்பளம் போடுவான்
புள்ளைகளுக்கு அனுப்பனும்
சொல்லி நகரும் அவருக்குள் கேள்விக்குவியல்கள்
உப்பின் செரிவை
குறைக்கத்தானோ ஊற்றிக்கொண்டார்
தண்ணீர் கொஞ்சம் ,,
மேனி குளிர்ந்திருக்கும் நாளைமறுநாள் மனது குளிரும்
சம்பளம் அவர்களுக்கு ,,,,

இல்யாஸ் இப்றா லெவ்வை
பொத்துவில்
இலங்கை

எழுதியவர் : இல்யாஸ் இப்ரா லெப்பை (30-Nov-13, 12:36 pm)
பார்வை : 75

மேலே