சுடலை மாடன் விட்ட வழி
நாள் பார்த்து மழை பார்த்து
விவசாயம் தொடங்கியாச்சு ,
தொடங்கிய நாள் முதலாய்
காடு சீர் சிருத்தி வரப்பு மேடாக்கி
விதை நெல்லும் வாங்கி நாத்து பாவியாச்சு
நாத்து விளைஞ்சு குப்பம் கட்டி
வயலில் நட்டாச்சு .
அடிஉரமும் மேலுரமும்
குருணை மருந்தும் தவறாமல் போட்டாச்சு .
களை பறிச்சு கம்மாய் தண்ணீ
முறை மாத்தி விட்டாச்சு
பால் பறித்து பயிரும் செழிப்பாய் நிற்க
கதிர் அறுக்கும் நாளிலே கவனமாய் இருந்து
கதிர் அறுக்க ஆள் பார்த்தால்
ஊரை சுற்றி ஆள் இருக்கு
கதிர் அறுக்க மட்டும் வர மனசில்லை
ஆலமர நிழலில் படுத்துறங்கி
அலுக்காமல் கூலி தர
அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் இருக்க
வந்த பணம் போதுமுன்னு
வயக்காட்டு வேலைக்கு வருவதில்லை
கதிர் அறுக்க இயந்திரம் வந்தாச்சு
கவலை இல்லை என்றால்
ஏக்கர் கூலி ஏறுக்குமாறாய் இருக்கு
எஜெண்ட் ரேட் பேசுகிறார்
நம்ம தேவை அறிந்து நம்மிடம்
பணம் கூட்டி வாங்குவதிலே கூறியாய்இருக்கிறார்
வயக்காட்டு வாழ்வு போதுமைய்யா
விளைஞ்ச நெல் கூலி போக மிஞ்சலை
கணக்கு போட்டபடி காசு வரலை
வந்த காசு வீடு தங்கலை
அடுத்த போகமும் இதே கதை தானைய்யா
வேறு வேலை தெரியலை
சுடலை மாடன் விட்ட வழி .