செம்மொழிக்குச் சேவை புரிந்த செம்மல்

தமிழுக்கு உலக அரங்கில் செம்மொழித் தகுதி கிடைக்கப் பாடுபட்ட அறிஞர்
தனிநாயகம் அடிகள் (1913-2013)

சீர்மிகு தமிழறிஞர் அருட் தந்தை (Rev, Fr.) பேராசிரியர் சேவியர் எஸ். தனிநாயகம் அடிளார் அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை மாநகரில் ஞாயிறன்று (01-12-1013) கொண்டாடப் படுகிறது. தமிழ் மொழியையும் மற்றும் தமிழ் இலக்கியத்தையும் உலகம் அறிய அரும்பாடு பட்ட செம்மல் இவர்.

தமிழ் இந்தியத் திருநாட்டில் தோன்றிய மிகவும் தொன்மை வாய்ந்த செம்மொழி என்ற தகுதியைப்பெற அயராத உழைத்தவர் தனிநாயகம் அடிகளார். இவர் இலங்கையச் சேர்ந்த கத்தோலிக்க கிறித்துவ பாதிரியாராவார். இவர் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இவரது தாய் பிறந்து வளர்ந்த கரம்பொன் என்ற ஊரில் பிறந்தவர். இவரது தந்தை டெல்ஃப்ட் தீவில் பிறந்தவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளத்தில் உள்ள செயிண்ட் தெரேசா உயர்நிலைப் பள்ளியில் (1941-1945) ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் மீது இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அடிகளார் தமிழ் மொழியை வீட்டிலும் காய்ட்ஸ்ல் உள்ள செயிண்ட் அந்தோணி கல்லூரி மற்றும் யாழ்பாணத்தில் உள்ள செயிண்ட் பேட்ரிக் கல்லூரியிலும் மாணவராக இருந்த போதும்தான் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராகவும் அறிஞாராகவும் ஆகவேண்டும் என்ற. அவரது பேராவல் நிறைவேறியது.
தனிநாயகம் அடிகளார் 1934-ல் இருந்து 1939-ஆம் ஆண்டுவரை ஐரோப்பாவில் தன்கியிருந்தபோது ஐரோப்பிய மொழிகளான ல்த்தீன், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீஸ், கிரேக்க மொழிகள் மற்றும் [யூதர்கள் பேசும்] ஹீப்ரு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றார். அம்மொழிகள் வழியாகத் தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.
நாளடைவில் சங்க இலக்கியத்தால் கவரப்பட்டு அதன் மீது அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏறபட்டது. அதன் விளைவாக தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் தன் திறமையை
வளர்த்துக் கொள்ள பேரார்வம் கொண்டு அண்ணாமலைப் பலகலைக் கழகத்தில் எம். ஏ தமிழ் (முதுகலை) வகுப்பில் சேர்ந்தார். அதில் தேர்ச்சி பெற்றபின் எம். லிட்., (இளம் முனைவர்) பட்டமும் பெற்றார்.
அடிகளாரவர்கள் இலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் மலேசியப் பல்கலைக் கழகத்திலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றியதுடன் உலகில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு அவ்போது சென்று
(Visiting Professor) தமிழைப் பயிற்றுவித்தார். அவர் மலேயாப் பல்கலைக் கழகத்தின் இந்தியப் புலங்கள் துறையின் தலைவராகப் பொறுப்பெற்றபின் உலகம் முழுதும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு உள்ள இடர்பாடுகள் கண்டு மனம் வெதும்பினார். அவர்கள் ஓரிடத்தில் கூடி அவர்களது (ஆய்வு) ஆராய்ச்சி சம்பந்தமாக அடிக்கடி சந்த்தித்து கருத்துப்
பரிமாற்றம் செயவதற்கான வாய்ப்பும் வசதியும் இல்லை என்பதே அவரது மனத்தைத் துளைத்தது. இது தமிழகத் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற அமைப்பை 1963-ல் உருவாக்க அவரைத் தூண்டியது. அந்த அமைப்பின் மூலம் மாநாடுகளை நடத்தும் பொறுப்பை தமிழக (அன்றைய சென்னை மாகாண) அரசே ஏற்றுக் கொண்டது. [அப்போது முதல்வராக இருந்தவர் பெருந்தலைவர் காமராசர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்].
சனவரி 1964 ஆன் ஆண்டு தில்லியில் நடந்த கீழைநாடுகளின் மகாசபை (Orientalist Congress) என்ற அமைப்பு கொடுத்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்துலக தமிழ் ஆராய்ச்சிக் கழகம் (International Association for Tamil Research) என்ற அமைப்பை உருவாக்கினார் தனிநாயகம் அடிகள். இதன் அடையாளமாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த (Jean Filliozat) ஜீன் ஃபிலியோசட் என்ற அறிஞர் இந்த அமைப்பின் தலைவரானார். இரண்டு ஐரோப்பிய அறிஞர்கள் இதன் துணைத் தலைவர்களாகப் பொறுப்பேற்றனர் ஐரோப்பிய திராவிடவியல் அறிஞர் (Davidolgoist Kamil V. Zvelebil) கமில் வி. ஜ்வேலெபில் என்பவரும் அடிகளாரும் இவ்வமைப்பின் பிற முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.

இந்த அமைப்புதான் இதுவரை எட்டு உலகத் தமிழ் மாநாடுகளை உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக நடத்தியது. இந்த மாநாடுகளில் வாசிக்கப் பட்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளே இந்த அமைப்பின் உயர்ந்த குறிக்கோள் நிறைவேற்றப்படுவதற்கு அச்சாரமாக அமைந்துள்ளன.
பின்னர் அருட் தந்தை தனிநாயகம் அடிகளார் மாதம் மும்முறை வெளியாகும் “தமிழ் பண்பாடு” என்ற இதழைத் தொடங்கினார். இதன் வாயிலாக தமிழறிந்த வெளிநாட்டவரைக் கவர்ந்தார். இது தமிழ் மொழி, பண்பாடு, தமிழர் வாழ்க்கை பற்றி புதுப்புது ஆய்வுகள் நடத்த வழிவகுத்தது. இவர் ஆய்வாளர்கள் பலரை நெறிப்படுத்தியதுடன் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
தனிநாயகம் அடிகளாரின் தொண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் பல கருத்தரங்களையும், ஆய்வுப் பட்டறைகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்த தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக் குழு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் அடிகளாரின் நூற்றாண்டு விழாவைத் தக்க முறையில் நடத்த அவர்களை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது படைப்புகள் மற்றும் ஆயவுக் கட்டுரைகள் அனைத்தையும் ஒரே தொகுப்பில் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தனிநாயகம் அடிகளாரின் பன்முனைச் சேவைகளைச் சிறப்பிக்கும் வண்ணம் அவர் பெயரில் பல்கலை கழகத்தில் புலப்பேராசிரியர் பதவியை உருவாக்குவது அல்லது ஒரு ஆய்வு மையத்தை நிறுவது, அவரைப் பற்றி குறும்படம் ஒன்றைத் தயாரித்தல் போன்றவற்றைச் செயலாக்குவது என்று விழாக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்தத் தகவல்களை திருச்சியில் உள்ள தனிநாயக அடிகள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் அமுதன் அடிகள் தெரிவிக்கிறார்.

நன்றி: சிறப்பு செய்தியாளர், The Hindu நவம்பர் 25, 2013. பக்கம் 6.
தமிழாக்கம்: இரா. சுவாமிநாதன்

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (30-Nov-13, 9:09 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 651

சிறந்த கட்டுரைகள்

மேலே