எனக்கு பிடித்தவை
காலையில் மலரும் தாமரையை விட
மாலையில் மலரும் அல்லி பிடிக்கும்
காலைக் காக்கையை விட
கூவும் குயில்கள் பிடிக்கும்
தண்ணீர் என் மேல் விழுவதை விட
தண்ணீருள் நான் விழுவது பிடிக்கும்
அன்பை பெறுவதை விட
கொடுப்பது பிடிக்கும்
நேசிக்கப்படுவதை விட
நேசிப்பது பிடிக்கும்
பிடித்தவர்களிடம் மட்டும்
பொய் பேசப் பிடிக்கும்
அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே
சாப்பிட பிடிக்கும்
அழுதுக் கொண்டே அம்மா மடியில்
உறங்கப் பிடிக்கும்
அண்ணணுக்கு பிடிக்காதவற்றை செய்து
அவரிடமே அடி வாங்கப் பிடிக்கும்
அழுதாலும் அவளிடம்(அக்கா)
அடிக்கடி சண்டை போட பிடிக்கும்
குழந்தைகளிடம் அடிக்கடி
தோற்றுப்போக பிடிக்கும்
நண்பர்களுடன் அரட்டை
அடித்துக் கொண்டே
தெருவோரக் கடையில்
சாப்பிட பிடிக்கும்
அன்புடையோர் மீது
அன்பில்லாதது போல்
நடிக்க பிடிக்கும்
நம்பிக்கை இல்லா விடினும்
நண்பர்களுடன் கோயிலுக்கு
செல்ல பிடிக்கும்
தூண்டில் போடுவதை விட
வலை வீச பிடிக்கும்!!!
இதை தவிர
காலை பனி
மாலை வெயில்
கடல் அலை
காதல் வலி
மிதக்கும் மேகம்
மிதக்கா மனம்
மண்ணின் வாசம்
மானின் கண்கள்
குழந்தையின் சிரிப்பு
கூழாங்கற்களின் வடிவம்
குற்றால சாரல்
கூச்சலிடும் பறவைகள்
கொஞ்சும் சலங்கை
என்னும் சில