ஏ இளைஞனே
ஏ இளைஞனே
நேற்றைப் பற்றி
கவலை படாதே
இன்று உன்னுடையது
ஊக்கத் தொகையாக
நாளையும் உண்டு
சாதித்து காட்டலாம் வா!
இன்றே பிற
இன்றே வாழ்
இன்றே இறந்து விடு
நாளைக்கென்று சேர்த்து வைக்காதே
நாளையும் பிறப்பாய்
மறுபடியும் பார்த்துக் கொள்ளலாம் வா!!
உலகம் படைக்கப்பட்டதே
உனக்காகத் தான்
உருட்டி விளையாடு
சம்பரதாரத்திற்க்கு சாட்டையடிக் கொடு
விஞ்ஞானத்தை விலைக்கு
வாங்கு, அதன் மேல் வெள்ளையடித்து
உன் பெயரை பட்டைத் தீட்டு!
ஏசும் கூட்டாமும் பேசும் கூட்டமும்
இங்குதான் உள்ளது
அதை சரிவர பிரித்தேடு
உன்னை நேசிக்கும் கூட்டமும்
இங்குதான் உள்ளது
உலகை ரசிக்க பழகிக் கொள்
முதற்க்காதல்
முற்றும் தோல்வியா
வேறு ஒருத்தி
இல்லையா என்ன?
காதலைக் காரணம் காட்டி
கவிழ்ந்து விடாதே
காலம் இதற்க்கெல்லாம்
பதில் சொல்லும்
ஒவ்வொரு நெற்மணியிலும்
உன் பெயருண்டு
பட்டிணிக் கிடந்து பழகாதே!
வாழ்க்கை வலிக்கும்
வலியெடுத்தால் வழிபிறக்கும்!!!!