மனைவியின் பாசக் கயிறு

மனைவியின் பாசக் கயிறு
எல்லை கடந்து செல்லும் போது
கோபம் எரிமலைக் குழம்பை
அள்ளி வீசும்; முகம் மட்டுமல்ல
மூக்கும் சிவ்ந்து போகும்.
கனிமொழி கன்னல் மொழி எல்லாம்
தீப்பொறியைச் சொற்களாய்
வாரி இறைக்கும்.
வீடுவரும் பொழுதென்றால்
வாசல் கதவு திறக்கத்
தவமிருக்க வேண்டும்.
வெளியில் செல்லும் வேளை என்றால்
நல்ல வசை காதுகளைச் செவிடாக்கும்.
நல்லவேளை எதையும் தாங்கும்
இதயம் இருப்பதால்
மாரடைப்பைத் தடைபோட்டுத்
தடுத்து விடுகிறேன்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (30-Nov-13, 10:45 pm)
பார்வை : 147

மேலே