நான் மரமல்ல மனிதன்

இப்பயெல்லாம்
நான் கோபபடும் போதெல்லாம்...

என் நண்பர்கள் ஏண்டா இப்படி மாறிட்ட!
உனக்கு இந்த கோபம நல்லாயில்லை.

நான் மரமல்ல மனிதன்
மழை நாளில் புழுங்கும் மனம் போல
புளித்த வார்த்தைகள் சலித்து
சுட்டுப்பட்ட செயல்கள் பார்த்து பட்டுன்னு கோவம் வெளிப்படுகிறது
அதுவும் வரவில்லை என்றால்
மனிதன் தானா நான் சந்தேகம் என்னையே சல்லடையிடுகிறது.

எங்க அப்பாவோ!
பச்சக்குழந்தை பேசுவதை வேடிக்கை பார்க்கிறது மாதிரி
நான் பேசுவதை நல்லா கவனிச்சு பார்க்கிறார்.
("பையன் புதுசா ஏதோ ட்ரை பன்றான்)

ஆனால் என் கோபம் என்பது
ஏதோ புரிந்துகொள்ள முடியா கணிதம்
என மனிதம் அலச்சியம் கொள்கிறது.

உண்மையின் வெளிப்பாடு
யாருடைய தவறுக்கான என் விமர்சனம்
உன் மாறுபட்ட கருத்திற்கு நான் உடன்படவில்லை.

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:28 pm)
பார்வை : 77

மேலே