நிரப்பிடா நிரப்பில் சிப்பங்கள்

நிரப்பிடா நிரப்பில் சிப்பங்கள்

மறைந்திருக்கும் விடை நான்
கோடிட்ட இடங்களுக்கு
அடுத்துள்ள அடைப்புக்குறிகளில்

இலக்கணப் பிழையின்றி
நிரப்பிவிடு என்னை

கருச் சிதைந்த
சுண்ணாம்பு திரவமாக
நம் முதல்நாள் சந்திப்பு

முத்தாவதற்கு முன்னமே
நீ திறந்துவிட்ட
விடுகதைக் கிளிஞ்சல்களில்

அடி வயிற்றிலே எழும்பிய
வெப்ப மேகங்க ளெல்லாம்

விலோசனங்களின் வழியே
பொழிந்துச் சென்ற வொரு
மழைநாள் மௌன இசை

சொல்லாத அன்பினை
மெய்ப்பிக்கும் இவ் ஆயுளில்

சிறிது சிறிதான
உயிருதிர்ப்பு துர்வேஷம்

கீற்றுக்கொட்டகை
மணற்மேடை ஞாட்புகளின் மேலே

அடைகாக்கிற கோழியாக
ஒருதலை நிறைவுப் பெட்டகம்

கோடைக்கால மரங்களினோடு
அற்றைக் கொத்திய
அந்தச் சாயகம்

பாடா வென் கவிக்குரலின்
விடை யறியாத
ஒற்றை மாற்றொலி

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (1-Dec-13, 12:31 am)
பார்வை : 116

மேலே