தாரம் அல்ல

தாரமல்ல நானுனக்கு
தாய் மடிதான் தான் கண்ணே !
சுமையல்ல நீயெனக்கு
சுகம் தானே கண்ணே !


அன்னையுன்னை சுமந்திட்டாள்
அடி உதரம் தன்னில் !
மன்னன் உன்னை சுமந்திடுவேன்
மங்கை எந்தன் தோளில் !

வாழ்கை என்ன வாழ்க்கையென்று
வாட்டம் கொள்ள வேண்டாம் !
வறுமை கூட ஓடிப்போகும்
வஞ்சி எந்தன் துணையால் !

ஆயுள் வரைக் காத்திடுவேன்
என்று நீயும் சொன்னாய் !
காவல் என்ன காவல் -உன்
கால்கள் எந்தன் கால்கள்

நொடிப்பொழுதும் பிரியாத
நோன்பு தனை நோற்றேன் !
இமைப் பொழுதும் பிரியேன்
இறகொடிந்தப் போதும்


தாயாக எனை மாற்றி
தலை நிமிரச் செய்தாய்
தாய் போலச் சுமந்திடுவேன்
தயக்கம் நெஞ்சில் வேண்டாம்

பசியதையும் பொறுத்திடாதே
பாவி எந்தன் பிள்ளை
பாரில் கையேந்தியேனும்
பார்த்திடுவேன் உன்னை


....................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (1-Dec-13, 12:40 am)
பார்வை : 188

மேலே