உறுப்பில் என்ன இருக்கிறது

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*கவலைப் படாதே!*
*சகோதரா....*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷


பேசும் சக்தியற்றவனே!
பேச முடியவில்லையே என்று
கவலைப்படாதே!
பேசுபவர்கள் மட்டும்
பெரியதாக
என்ன சாதித்தார்கள்
பேசுவதோடு சரி......

பார்க்கும் சக்தியற்றவனே !
பார்க்க முடியவில்லையே! என்று
பரிதவிக்காதே !
பார்ப்பவர்கள் மட்டும்
பெரியதாக
என்ன சாதித்தார்கள்
பார்ப்பதோடு சரி
எதைத்தான்
தட்டிக் கேட்டார்கள்.....?

கேட்கும் சக்தியற்றவனே!
கேட்க முடியவில்லையே! என்று
வருத்தப்படாதே !
கேட்பவர்கள் மட்டும்
பெரியதாக
என்ன செய்தார்கள்
கேட்பதோடு சரி...
எதைத் தான் பின்பற்றினார்கள் ...

கை இல்லாதவனே !
கை இல்லையே ! என்று
கவலைப்படாதே!
கையிருப்பவர்கள் மட்டும்
பெரியதாக என்ன செய்தார்கள்
பாவம் செய்வதைத் தவிர...

கால் இல்லாதவனே!
கால் இல்லையே! என்று
கண்ணீர் விடாதே !
கால் இருப்பவர்கள் மட்டும்
பெரிதாக என்ன செய்தார்கள்
கால்மேல் கால்போட்டு
உட்காருவதைத் தவிர....

உறுப்புகளில்
என்ன இருக்கிறது?
உறுப்பு மட்டும் தான்...

*கவிதை ரசிகன்*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (20-Sep-24, 9:05 pm)
பார்வை : 2

மேலே