என்னே ஓர் அற்புதம்
பே ரிரச்சலடுன் ஆடிப் பாடும் கடலே
உன்னிடையே மேலும் கீழும ஏறி இறங்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு கும்மாளுமிடுகிறாய்?
குமறிக் கொப்பளிக்கும் கடலே
உன்னுள் கோரத் தாண்டமாடும் அலையே
எதற்கு நீ இவ்வாறு கோபம் கொள்கிறாய்?
சலனமே இல்லாமல் தவழும் கடலே
உன்னிடம் ஒரே கோட்பாட்டில் அடங்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு நிதானமா இருக்கிறாய் ?
ஆழம் தெரியாத நீலக் கடலே
உன் மேல் அலங்காரமாக சலசலக்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு பதுங்குகிறாய்?
உன்னை எப்போது பார்த்தாலும் ஆனந்தம்
எத்தனை முறை கண்டாலும் அதிசயம்
கனவோ நனவோ என்னே ஓர் அற்புதம்