பசுமையை நேசிப்போம்
இயற்கை தாயின் மடியில்
இனிய பூமியின் கொடியில்
இதயம் ஈர்க்கும் பச்சை
தரை எனும் உடலில் தாவரம்
தரணி எங்கும் வீசும் சாமரம்
ஏழைக்கு வீடு இம்மரம்
எவர்க்கும் நிழல் தரும் இத்தாவரம்
படுத்து வளர்ந்திடும் ஓர் இனம்
படர்ந்து வளர்ந்திடும் ஓர் இனம்
உயர்ந்து வளர்ந்திடும் ஓர் இனம்
உயிரை வளர்த்திடும் ஓர் இனம்
புல்லாய் வாசம் வீசிடும்
பூமி எங்கும் செழித்திடும்
எங்கும் எதிலும் எழுந்திடும்
ஏற்றம் பெற்று விளங்கிடும்
பனித்துளி உறவின் புல்லாகும்
பசுமை தருவதே இதன் தொழிலாகும்
ஈன்றோரை நேசிக்கும் இதயங்களே
இப்பசுமையை நேசிக்க வாருங்களேன்
வீழ்ச்சியுறும் பூமியை விண்ணளவு
உயர்த்த வாருங்களேன்!