ஏன் இப்படி மாறினேன் என்னவளே நீ சொல்லு

பனை ஓலை மடித்தே மனம்
பதனி பருகக் கண்டேன் - அவள்
இரு கைகள் குவிப்பில்
இருந்த நதிநீர் ரசித்து.....!

நிரம்பி வழியுது காதல் - அவள்
நீள விழி எங்கே...?!
அரும்பாத இதழ்கள் போலே
அவள் இமைகளுக்குள்ளே..!

உச்சி முதல் பாதம் வரை குளிர்
உரசுவதாய் ஒரு கனவு...! இருந்தும்
உட்புறமாய் உதடுவழி
காதலெனும் கனல் காற்று....!

குளிரா கனலா என
குழம்புகின்ற எனைத் தேற்று...
கொஞ்சும் கிளியே மீண்டும் எனை
குழந்தையென நீ மாற்று....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Dec-13, 12:11 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 94

மேலே