கல் நெஞ்சம்

விரட்டியடிக்கப்பட்ட தெருநாயாய்
திரும்பி வந்து சொல்கிறது
நான் அனுப்பி வைத்த காதல்
“இந்த மாதிரி ஒரு கல் நெஞ்சக்காரியை
நான் பார்த்ததே இல்லை.. அவளை விட்டு விடு...வேண்டாம் உனக்கு “
மௌனம் பூசிய முகத்துடன் நின்ற என்னை
பார்த்ததும் அது சலித்துக் கொண்டது
“அவளை விட இவன் கல்நெஞ்சக்காரன்.”

எழுதியவர் : ஹரி arun (2-Dec-13, 4:41 pm)
Tanglish : kal nenjam
பார்வை : 146

மேலே