வெறும் வயிற்றோடு துடிக்கும்
ஆடம்பர மாளிகையில்
அலங்கார மின் விளக்குகளே
அவர்கள் வீட்டு நட்சத்திரங்கள்
எம் வீட்டில் நட்சத்திரங்களே
அலங்கார விளக்குகள்
வீட்டு கூரையில் பிரகாசமாய்
ஒளிந்துகொண்டிருக்கும்
எங்கள் வீட்டு மின் விளக்குகள் ....!!!
ஒரு கடி கடித்து விட்டு
ஓரமாய் கிடக்கும் ஆப்பிள் பழம்
அந்த வீட்டின் அநாதை பிறப்பு
எப்போது எங்கள் வீட்டுக்கு
அப்பிள் பழம் வரும் என்பது
அப்பிளுக்கு எங்கள் வீடு
பிரதம விருந்தினர் .....!!!
பழங்கஞ்சிதான் எங்கள்
தினம் தோறும் ஊட்டப்பாணம்
எம் குழந்தையின் அழுகை ஓசை
அடங்கும் வரை ...
"குழலினிது யாழினிது " என்ற
குறள் கூட வியப்புடன் தான்
பார்க்கிறோம் .......!!!
சப்பாத்து இல்லையே என்று
கவலைப்படாதே -கால்
இருக்கே என்று சந்தோசப்படு
என்றான் ஒரு தத்துவ ஞானி
பழங்கஞ்சியாவது கிடைக்கிறதே
என்று சந்தோசப்படுவதன் மூலம்
வெறும் வயிற்றோடு துடிக்கும்
குடும்பத்தை விட எம் குடும்பம்
அரச வாழ்க்கைதான் வாழுகிறது ....!!!