ஆள்பாதி ஆடைபாதி

ஆள்பாதி ஆடைபாதி!
ஆண்பாதி பெண்பாதி!
ஆணே உனக்கு
பெண்ணே சரிபாதி!
பெண்ணே உனக்கு
ஆணே மீதிப்பாதி!

பெண்ணாடை சரியில்லை
இதுபோல் தொடரும்
ஆணின் வாதம்!
ஆண்நடத்தை சரியில்லை
இதுபோல் வளரும்
பெண்ணின் போக்கு!

ஆணென்ற கர்வமும்
தலைகீழாய் கவிழ்க்கும்
அறிவோடு இருங்கள்!
பெண்ணென்ற ஆனந்தமும்
அதிரடியாய் வீழ்த்தும்
அடக்கத்தோடு வாழுங்கள்!

ஆணும் பெண்ணும்
அன்பினால் சேரும்போதுதான்
அனைத்துயிரும் முழுமையாகும்!
ஆணென்ற வீரமும்
பெண்ணென்ற காதலும்
கலந்ததுதான் உலகிற்கழகாகும்!

ஆணுக்குள் பெண்ணும்
பெண்ணுக்குள் ஆணும்
இருப்பதே உயிரின் நோக்கமாகும்!
அன்பும் அடக்கமும்சேர
பண்பாக இருப்போம்
ஆனந்தமும் அற்புதமும்சேர வாழ்வோம்!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (4-Dec-13, 10:19 am)
பார்வை : 324

மேலே