கொலுசு பெண்ணே

உன் காலடி ஓசை கேட்டேன் பெண்ணே
அதில் என் உயிரையே தொலைத்தேன்
செல்ல ஒலி சிணுங்களை கேட்டேன்
என் உறக்கத்தை முழுக்க தொலைத்தேனடி
பளிங்கு சிலையே என் உயிர் அன்பே
உன் பாதங்களை கட்டி அணைக்கிறதே
முத்தத்துடன் வெள்ளிக் கொலுசு

கொலுசே வெள்ளி கொலுசே எங்கே
நீயோ என்னவள் பாதங்களில் இருந்தே
கொஞ்சிக் கொஞ்சி தினமும் பேசுகிறாய்
நீயோ என்னவளின் உயிர் சொந்தக்காரி
சுட்டி பெண்ணே அமைதி கொள் கண்ணே
நீ மெல்ல நடந்து வர உன் காலடி ஓசைகேட்டேன்
அதில் என் உயிரையே தொலைத்தேன்

செல்ல ஒலி சிணுங்களை கேட்டேன்
என் உறக்கத்தை முழுக்க தொலைதேனடி
பளிங்கு சிலையே என் உயிர் அன்பே
உன் பாதங்களை கட்டி அணைக்கிறதே
கொலுசே வெள்ளி கொலுசே எங்கே
என்னவள் பாதங்களில் நீ இருந்தே
கொஞ்சி கொஞ்சி மெல்ல பேசுகிறாய்

நீயோ என்னவளின் உயிர் சொந்தக்காரி
சுட்டி பெண்ணே அமைதி கொள் கண்ணே
நீ மெல்ல வீதியில் உலா வலம் வரும் போதே
கொலுசு சத்தம் ஏனோ என்னை கொல்லுதடி
என் மனதை உந்தன் கொலுசு மெட்டுப் பாடியே
நீயோ விட்டு சென்ற உந்தன் ஞாபகங்களில்
எந்தன் கண்களில் கண்ணீர் ஈரம் சொட்டுதடி
உந்தன் நினைவுகளில் வாழுகிறேன் கண்ணே
தினம் தினம் என் உயிரையே கொல்லுதடி கொலுசு
அழுதழுது உடல் வற்றி உயிர் வற்றி போனேனடி

என் இதயமே நீயே என்னை கொல்லும்
உந்தன் கால் கொலுசு கொலைகாரி
பெண்ணே கேள் உன்னை வேவு பார்க்க
உன் அப்பன் இட்ட கொலுசா இல்லை
உன் தாய் மாமன் இட்ட வெள்ளி கொலுசா
எவன் இட்ட கால் விலங்கிதோ சொல்
விலங்கினை உடைத்து எறி பெண்ணே
சத்தம் இல்லா கொலுசை அணி பெண்ணே
நீ கொலுசு அணிவது கூட நாகரிகமாமே
கொலுசு திருடி என் இதயத் திருடிக் கண்ணே
உன் பாதம் போடும் பல மெட்டு ஒலிக்கு
என் உயிர் துடிப்பு உன் கொலுசின் சிணுங்கள்
பெண்ணே கொலுசின் சிணுங்கள் வரும் போதே

உன் கொலுசு சத்தம் என்னை கொல்லுதடி
என் மனதை உந்தன் கொலுசு மெட்டுப் பாடியே
நீயோ விட்டு சென்ற உந்தன் நினைவுகளில்
தினம் தினம் உன் கொலுசு கொல்லுதடி பெண்ணே
என் இதயமே நீயே ஏனோ என்னை கொல்லும்
அடங்காத கால் கொலுசு கொலைகாரியோ
பெண்ணே உன்னை சுற்றி வேவு பார்க்கவே
எவன் இட்ட கால் விலங்கிதோ சொல்லி விடு
பொல்லாத கொலுசு திருடி என் இதயத்திருடி
உன் பாதம் போடும் மெட்டு ஒலிக்கு நானோ பலி
என் உயிர் துடிப்பு அதில் உன் கொலுசின் ஒலி

எழுதியவர் : (4-Dec-13, 8:20 pm)
Tanglish : kolusu penne
பார்வை : 644

மேலே