வீழ்ச்சி
வருடத்திற்கு ஒருமுறை விமானத்தில்
பிக்னிக் போலே நம்வீட்டுக்கு
வந்து செல்கிறோம்
தொலைபேசி வழியாகவே
தாயின் குரலை கேட்கிறோம்
காணொளி காட்சி மூலமாகவே
மனைவியின் முகத்தை பார்க்கிறோம்
தெருவில் செல்லும் பொழுதில்
குழ்ந்தைகள் பஞ்சுமிட்டாய் கேட்டால்
கிரெடிட் கார்ட்யும் டெபிட் கார்டையும் பர்சில்
வைத்துகொண்டு அல்லாடுகிறோம்
உடல்நிலை பாதிக்கப்பட்டால்
ஆயிரம் சொந்தம் இருந்தும்
அனாதை ஆகிறோம்
இப்பொழுது சொல்லுங்கள்
டாலரருக்கு நிகராக
இந்திய ரூபாயில்
வீழ்ச்சியா!!!