நண்பனின் திருமண அழைப்பிதழில் எனது கவிதை

வாலிபம் என்பது
வாழ்க்கையின் வசந்தம்! - அதில்
திருமணம் என்பது
தித்திக்கும் திருப்பம்!

இது இல்லங்கள் இரண்டு
இணைந்து பேசி
உள்ளங்கள் இரண்டை
இணைக்கும் நிகழ்ச்சி!

இது சிறுவையில் பிறந்து
சிறகடித்த கமலும்,
கோபால்பட்டியின்
கோமகள் தேவியும்,
இல்லறத்தில் இணையும்
இனியதொரு விழா!

கவிதைக்குத் தமிழ்!
கனிவுக்குக் கமல்!
பூட்டிற்கு சாவி!
பொறுமைக்கு தேவி!

இல்லறப் பள்ளியில்
இணைந்து பயிலவிருக்கும்
இவர்களுக்கினி,
புரிந்து கொள்ளுதலே
புத்தகப் பாடம்!
விட்டுக் கொடுத்தலே
வீட்டுப் பாடம்!

கைபேசிப் பதிவில்
குறித்துக்கொள்ளுங்கள்
ஐப்பசி பனிரெண்டில்
திருமணமென்பதை!

வானின்றி ஏது நிலா?
உங்கள் வாழ்த்தின்றி
ஏது இவ்விழா?

குவியப்போகும்
உங்கள் வாழ்த்துகள்
குண்டலப்பட்டியில்
குன்றாகட்டும்!
குதூகலம் தவிர
இவர்கள் வாழ்வில்,
குறைகளே இல்லை
என்றாகட்டும்!


- நிறைந்த அன்புடன்,
நிலவை.பார்த்திபன்

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (5-Dec-13, 1:23 pm)
பார்வை : 896

மேலே