பாவாடை தாவணி
பாவாடை தாவணிக்கு
பூவாடை பொய்யெதற்கு?
ஆவாடை சேலைக்கு
மேவாடை அணியெதற்கு?
கண்ணுக்கு அழகாகும்
பெண்ணுக்குத் தாவணியாம்.
மண்ணுக்குப் பெருமையாம்
பண்புக்கு சேலையாம்.
பாவாடை தாவணிக்கு
பாசமே நேசமாகும்.
காவாடை சேலைக்கு
கருணையே வாசமாம்.
அகந்தனில் அன்பிருக்க
விகற்பங்கள் நேராது.
உகந்தசேலை தாவணியில்
முகம்மலரும் தாய்மையே!
தமிழ்சொன்னப் பண்பாடு
தவறாது கொண்டிட்டால்
கமழுமே தேவமணம்
சமமாகும் கற்புநிலை .
கொ.பெ.பி.அய்யா.