மண்டேலாவை கவர்வத காளானே ஜாக்கிரதை
மண்டேலாவை கவர்ந்த காளானே ஜாக்கிரதை
மண்டேலா உனை
சண்டாளன் எனும் காளன்
சாகடித்து விட்டானோ ?
கருப்பு இனத்தின்
பொறுப்பு நாயகனே !
உன் மீதா காளானுக்கு வெறுப்பு ?
அரசே உன்னை மண்டியிட்டு
விடுதலை செய்த போது
இவன் சண்டையிட்டு
உனை கவர்து சென்றுவிட்டானோ ?
மரணம் உனக்கல்ல மண்டேலா
இன்னும் நிறவேறி கொடுமையால்
நிம்மதியை தொலைத்து கொண்டிருக்கும்
கருப்பின உயிர்களுக்குதான் !
காளனே நான்
கண்கழங்கி நிற்கிறேன் எங்கள்
மண்டேலாவை மீண்டும்
உயிர்பித்து தந்து விடு !
இல்லை நீ கருப்பு எருமையில்
வரும்போது
வெறுப்பாய் உனையும்
நிறவெறியர்கள் கொன்றுவிடுவார்கள்
ஜாக்கிரதை !

