எனது பொம்மை

Mouse..,
எப்போதும்
நான் தொட்டணைத்து விளையாடும்
என் பொம்மை..!


Keyboard..,
சில நேரம்
தட்டி தட்டி கொஞ்சம் கொட்டி கொட்டி - நான் விளையாடும் என் பந்து...!


monitor..,
எப்போதும்
நான் உன்னிப்பாய் நோக்கும்
என் நிழல் காதலி..!


Wires & Cables..,
நிலையாக
என்னை எனது பொம்மையுடன்
இணைக்கும் என் நண்பன்..,


CPU..,
உஷ்..! எனது பொம்மையின்
உயிரை பாதுகாக்கும்
ரகசிய பெட்டகம் அது..,


Processor..,
நான் போகும் வழியை
எனக்காக நேர் செய்யும்
என் வழிகாட்டி அவன்..!


Memory..,
எனக்காய், தன் நினைவுடன்
என் நினைவையும்
சேர்த்து சுமக்கும் என் சுமைதாங்கி..!


Motherboard..,
என் தந்தை தந்த விந்தை அல்லவா
இங்கு தாய் இல்லாமல் போனால்
ஒன்றுமில்லா ஊமை தான் - என் நிலை


Current..,
தொட்டால் சீரும் கன்னியவள்
என் பொம்மையுடன் விளையாட
இவள் அனுமதி நிச்சயம் வேண்டும்..!


Files..,
எப்போதும்
நான் சேமித்து வைக்கும்
எனது பொக்கிஷ பொம்மைகள்..,


Virus..,
என் பொம்மையை
என்னிடமிருந்து பறிக்கும்
எதிரி அவன்தான்..!


Animation..,
நின்ற இடத்திலேயே என்னை
பறக்கச் செய்யும்
என் கற்பனை கயிறு..!

Software..,
தன் சாமர்த்தியத்தால்
என் வேலைப் பளுவை குறைக்கும்
நான் விரும்பும் எனது பணியாளன்..!

Printer..,
என் ஞாபகங்களை
பரிசாய் பெற்றுத் தரும்
என் உறவினர்..,


Switches..,
எங்கள் உறவின்
ஆரம்பப்புள்ளியும் அது தான்
முடிவுப்புள்ளியும் அது தான்..!


Internet..,
எமக்கு விளையாடக்
கற்றுத்தந்த ஓர் உண்மையான
அனுபவமிக்க ஆசான்..!


இப்படி தனித்தனியாய் இருக்கும் இவர்களை இணைத்து என் தந்தை(Charles Babbage) வழியாய் நான் பெற்றேன் எனது பொம்மையை
கணினி என்ற பெயரில்..,!

எழுதியவர் : jenni (6-Dec-13, 11:18 am)
Tanglish : enathu pommai
பார்வை : 1237

மேலே