நானும் என் புது உயிரும்
நானும் என் புது உயிரும்!
------------------------------------
அவளது நெற்றியில் நான் இட்ட முத்தம்,
உலகின் மிக மென்மையான சத்தம்!
நான் தொலைக்கின்றேன் எனது முழு இரவை - அவளை தூங்க வைக்க!
அவள் அழைக்கிறாள் என்னை அவள் உலகுக்கு - என்னை புரிய வைக்க!
இரவு முழுதும் தூங்காமல் அழும் போது கவலைப்படும் என் மனது,
அவள் என்னை பார்த்து சிரிக்கையில் சட்டென சிறகடிக்கும் பொழுது!
பேயே எதிரில் நின்றாலும், கவலைப்படாத நான்
ஒரு சிறிய கொசு, என் குழந்தைக்கருகில் வருகையில்
சுனாமியை கண்ணெதிரே பார்க்கும்
பதபதப்பை உணர்வதேனோ?
அவளை அரவணைத்து பிடிக்கையில் மட்டும் உணர்கிறேன்!
ரோஜா இதழை விட மெல்லியது அவள் மேனி என்பதை!
அவள் இந்த உலகுக்கு புது வரவு,
எனக்கோ தருகிறாள் மெல்லிய ஸ்பரிச உணர்வு
நான் அவள் சுண்டு விரலை பிடிக்கையில்,
அவள் அதை இறுக்கி பிடிக்கும் போது தான்
மேலும் புரிகிறது அவளின் ஸ்பரிசம்!
இரு சொட்டு மழை என் மேல் படும் போது வரும் கோபம்,
அவள் அருவியாய் என் மீது பெய்யும் போது வருவதில்லை!
எனக்கும் என் மனைவிக்குமான இடைவெளியில்
அவளின் புது நிரம்பல் நெருட வில்லை ஏனோ!
புதுபுது உணர்வுகளை உணர்கிறேன் தினம் தினம்!
அழுகிறாள்! புன்னகைக்கிறாள்!
அவள் மென்மையை உணர வைக்கிறாள்!
என்னவென்று நமக்கு புரியாத ஒன்றை
நமக்கு புரிய வைக்க முற்படுகிறாள்!
அதை புரிந்து கொள்ள நானும் பெரும்பாடு
படுகிறேன்! இறுதியில் தோற்கிறேன்!
ஆனால் அவளிடம் தோற்பதிலும்
உள்ள சுகத்தை சொல்ல
செந்தமிழான தமிழ் மொழியும் தோற்று விடும்
என்பதை நான் மட்டும் அறியேன்! :)

