உன் புகைப்படம்

பார்க்கும் போதெல்லாம்
புன்னகைக்க தோன்றும்
உன் இதழோர புன்னகை
இமைக்காத பார்வை
பார்வையிலும் கசியும் புன்னகை
இயற்கையிலே சிவந்திருக்கும்
உன் உதடு
கண்ணத்தின் மச்சம்
கலையாத கூந்தல்
அதில் எட்டிபார்க்கும் ஒற்றைரோஜா
உன் கரும்சிவப்பு உடை.
உன் தலைகணத்தை போலவே
அதிகமாகவே இருக்கிறதடி
உன் அழகும்…..
நேற்று பார்த்தது போலவே இருந்தாலும்
என் கண்ணில் பிடித்து
இதயத்தில் புகைப்படமாக்கி
வருடங்கள் பல ஆகிவிட்டதடி.....

எழுதியவர் : கிளிப்போர்டு குமார் (6-Dec-13, 10:20 pm)
Tanglish : un pukaipadam
பார்வை : 339

சிறந்த கவிதைகள்

மேலே