தலைப்பை தேடி

சிந்தனையில் ஏதுமின்றி
சிந்திக்க எதுவுமின்றி
எழுதணும் என்றதனால்
தலைப்பிலே தகராறு...

வார்த்தைகளை தேடித்தேடி
வடித்திட கவிதையொன்று
வந்திடும் என்றெண்ணி
வீதியிலே காத்திருந்தேன்

உன்னத தலைப்பினை
உன்னிடம் நான் கேட்க
உதிர்க்கும் உன் வார்த்தைக்காக
உன் குரல் கேட்டிருந்தேன்

உணவெடுக்க சில நிமிடம்
எடுத்ததில் பசியாற சில நிமிடம்
அன்னம் பட்ட விரல்களை
அலசிஎடுக்க ஒரு நிமிடம்

தண்ணீர் எடுத்து பருகிடவும்
நொடி, நொடியாய் நேரம் செல்ல
நினைவுகளை கோர்க்கவா?
வலிகளை மறைக்கவா?

கவிதையின் தலைப்புக்காக
காத்திருந்த நேரத்தில்
உனக்கு உறக்கம் வந்தது
எனக்கு பொழுது விடிந்தது...!

==========
கதிர்மாயா
==========

எழுதியவர் : கதிர்மாயா (6-Dec-13, 11:28 pm)
Tanglish : thalaippai thedi
பார்வை : 98

மேலே