நம்மூரப்போலாகுமா
நம்மூரப்போலாகுமா ???????
எங்க ஊரு “காரணி” ஊரச் சுத்தி நூறு “கேணி”
தெக்க போனா “தெள்ளாறு” , வடக்கப்போனா “பாலாறு”
“ தேசிங்கு ராஜா ” ஆண்டாரு. “செஞ்சி” கோட்ட மன்னரு
“ஒத்தேரி”, “சித்தேரி” நடுவால “பெரியேரி”
ஏரிக்கு “எதுவாயில” (பின்னால்) “எளங்காடு” (இளங்காடு)
வீட்டுக்கு நாலு “வெள்ளாடு” “மந்தை”யில “செம்பிலி” (செம்மறி) ஆடு
“வண்டி மாடு” “ஒழவு(உழவு) மாடு” மேச்சலுக்கு எளங்காடு
“மோட்டு குடிசை”ல, “ தோட்டி ... தலையாரி ”
“பனஞ்சால, ஓடக்கறை” ஓடப்பக்கம் “சுடுகாடு”
ரோட்டோரம் புளியமரம், “கொரங்கால மரம்”
“வண்ணாங்கணத்தோரம் “பேயாடும் அரசமரம்”
“கோரக்கொல்ல, சோளக்கொல்ல, ஆனகல்லு”
“பெரிய மதுவு (மதகு).. “ஏரிக்காவாய்” “கொண்டமடை”
“பெரியவரப்பு, கரும்புதோட்டம், குள்ள நரி”
குதுரகுட்ட(குதிரைகுட்டை), “குமணங்குளம்”
“சாலக்கெணறு“ சவுக்குதோப்பு, ஈச்சம்பள்ளம்”
பள்ளிகூடம், பஞ்சாயத்தாபீசு, மாட்டாஸ்பித்திரி
“கூட்ரோடு” “கள்ளுகட” “அனுமார்கோயிலு” “சைகில்ஷாப்பு”
“வண்டிகொட்டா” “வாத்துகுட்ட” “பூர்சமரம்” (பூவரசன் மரம்)
ஐய்ய்யோ..
எத்த்னை இடங்கள்.. எத்தனை நினைவுகள்..
இன்னும் பல மறந்து போனதோ?.. எண்ணிப்பார்க்கிறேன்...
உலகம் முழுதும் பறந்து திறிந்தேன்.. ஆனால்
உள்ளூர் நினைவே உணர்வின் நிறைவு.
ஜ.கி.ஆதி