நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே ..............???
நெஞ்சு பொறுக்குதில்லையே கண்ணம்மா
நிலை கேட்ட மனிதரைக் கண்டு
மங்கையராய் பிறப்பதற்கே -நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா
இது பாரதியின் வாய் மொழி
இவளுக்குத் தமிழ் தாய் மொழி
இவள் பயின்றதுவோ முதுகலை -அதுவும்
இரண்டு முறைப் பட்டம்
நாளும் வாழ்வது இருட்டறையில்
பார்ப்போர் கண் குருட்டறையில்
உடைமைகளைக் கூறு போடப் பலர்
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க எவர் ?
பருவப் பெண்ணாய் இருக்கையில்
பலரும் பார்த்து வியந்திருப்பார்
பகட்டுப் புன்னகைகள் வீசி
பாசாங்குகள் பல காட்டியிருப்பார்
இன்று உன் பட்டம் எங்கே
உடன் வந்த உறவுகள் எங்கே
பல்லிளித்த பரதேசிகள் எங்கே -நீ
பட்டினியாய் வாழ்கிறாய் இங்கே
மற்றோர் பார்வையில் நீயொரு பைத்தியம்
என் பார்வையில் நீயொரு ஞானி
உன் பார்வையில் நீயொரு புதுப் பிறப்பு
கடவுள் பார்வையில் நீயொரு புனிதப் பிறப்பு
...........................சஹானா தாஸ்

