விசித்திரப் பறவை

ஒரு சிறகு
கறுப்பு
மறு சிறகு
வெளிச்சம்

எந்தவொரு
வீதியிலும்
இரை கொத்தாமல்
எந்தவொரு
கிளையிலும்
இளைப்பாறாமல்

என்னமாய்...
வேகத்துடன் பறக்கிறது
காலக்கிளி

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (7-Dec-13, 1:11 pm)
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே